என் மௌன நெஞ்சம்

பள்ளிப் பிள்ளை

துள்ளி வந்து

சொல்லும் வார்த்தை

 

கல்விச் செல்வனவன்

சொல்லில் வல்லான்

சொற்கள் எல்லாம் – சொல்லும்

பல்லோடு நிற்கும்.

 

பல்லில் நின்ற

சொற்கள் எல்லாம்

வெளியில் வந்தால்

மனதே தாங்கலே.

 

ஏன்?

அவன் இதயம்

கீறல் பட்டதால் – கீற்றைத்

தேடும் சிலரிங்கே

சிறகாய்ப் பறக்கின்றனர்.

 

அதனால்தான்,

நான்

தவியாய்த் தவிக்கின்றேன்

செய்வதேதும் அறியாமலே.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா