நினைவுகள்

நினைவுகள்

நெஞ்சில் நிற்பவை

அழிந்து போவது… அல்ல…

 

நினைவுகள்

கலைந்து போகும் வெண்மேகமல்ல

கடல் அலை.

 

தோன்றி மறையும்

மின்மினிப் பூச்சியல்ல

கலங்கரை விளக்கு.

 

உருவாக்கி அழிக்கும்

டேப்ரிக்கார்டர் அல்ல

கல்வெட்டுக்கள்

 

மழைத்துளிகள் அல்ல

கன்னிப் பெண்களின்

கண்ணீர்த்துளிகள்

 

நிறம்  மாறிப்போகும்

வண்ண ஆடைகளல்ல

வெண் ஆடைகள்.

 

பருவத்தில் பூக்கும்

மல்லிகைப் பூக்களல்ல

தாமரைப் பூக்கள்.

 

நினைவுகள்

மணல் வீடுகளல்ல

கருங்கல் கோபுரங்கள்.

 

நினைவுகள்

நெஞ்சில் நிற்பவை

நெகிழ்ந்து போவதல்ல.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா