படிதாண்டிய பத்தினி
முத்துமாலை யொன்றிற்கு
முந்தானை விரிச்சிடுவா
முக்கியமா,
ஒன்றை மறைச்சிடுவா
அவள், எங்கள்
படிதாண்டிய பத்தினி.
முப்பது நாள்
கூலிக்கு வேண்டி
விதவிதமா சேலை
கட்டி
சேலைக் கேற்ற
நடையோடு
ஒய்யாரமாய்ச்
சென்றிடுவாள்
அவள், எங்கள்
படிதாண்டிய பத்தினி.
ஆண் பிள்ளை இங்கு
பெண் பிள்ளையானால்
பேதமில்லாமல்,
நாணமில்லாமல்
பங்கேற்றுச் செய்திடுவாள்
பங்காளியோடு பழகிடுவாள்
பழச் சொல்லையும்
ஏற்றிடுவாள்
அவள், எங்கள்
படிதாண்டிய பத்தினி.
வாடியம்மா
உனக்கு இங்கே
வகை வகையாய் செய்திருக்கேன்
என்று,
குழைமாலை சூட்டியே
குழைவோடு கூப்பிட
கும்பிடு போட்டிட்டே
குடிலுக்கு வந்திடுவாள்
அவள், எங்கள்
படிதாண்டிய பத்தினி.
பாரதிப் பெண்
பாட்டிலே நின்றாள்
– இன்று
பாரதப் பெண்
ரோட்டிலே நிற்கிறாள்
கடைசியில்,
வேதனைக்குள்ளாகி
சோர்வோடு போகிறாள்
அவளும், எங்கள்
படிதாண்டிய பத்தினி.
Comments
Post a Comment