மல்லிகைப் பூ வாசம்
சோலையில் பூத்த
மல்லிகைக்கு
ரோசாப்பூ
கொண்டைக்கு வேண்டுமாம்.
கொண்டை சிறிதானாலும்
உன்னைவிட வாசனை
ஊருக்கே தெரியுமென்று
வீராப்புடன் கேட்டது.
உங்கள் தோட்டத்தில்
கொடிமல்லி இருந்தால்
– உன்
காதோடு சொல்லிடும்
தன் கொண்டைக்கு
ரோசாப்பூ வேண்டுமென்று.
என் மணத்திற்கே
மாநகரம் தஞ்சம்
என் நிறத்திற்கே
பால்மனம் மஞ்சம்
அதற்கே,
வானகரம் கெஞ்சும்
கெஞ்சலிலே
நாமதை செஞ்சோம்.
Comments
Post a Comment