கவிதை
பெய்த மழை அனைத்தும்
பொய்கைக்குச்
சொந்தமல்ல
விளைந்த தானியங்கள்
விதைக்கு மட்டும்
உதவுவதில்லை.
ஒரு தாயின் பிள்ளை
அவளுக்கே சொந்தமல்ல
கண்டு பிடிப்புகள்
ஒருவனுக்கே உரியதல்ல
அழகு, சிலைக்கு
மட்டும்
வழக்கான சொல்லல
கவிதை,
ஒரு தீவுக்குச்
சொந்தமல்ல
மொழிக் கவிதை
நாட்டுக் கவிதைகளைவிட
ஒற்றுமைக் கவிதைதான்
- என்றும்
ஓங்கி நிற்கும்.
கவிதையின்
கருப்பொருள் ஒன்றாகலாம்
ஆனால், அவற்றின்
உரிப்பொருள்
கவிஞனுக்கே
உரிமைப் பொருளாகும்.
கவிதைகள்
ஒப்பு நோக்கும் போதுதான்
ஒற்றுமையில் அவை
மிளிர்வது தெரிகின்றது.
கவிதை
ஒரு தீவு அல்ல,
கடல்.
Comments
Post a Comment