புத்தாண்டு வரவினிலே…
கடந்த இந்தாண்டை
இனி எண்ணித்தான்
பார்க்கணும்
எழுதித்தான் வைக்கணும்.
இன்று,
புத்தம்புது ஆண்டு
பூமகள் வரவிலே
புதுநிலா ஒளியிலே
வெண்மையோடே பிறந்தது.
ஆம், பிறந்து
விட்டது – அது
சிந்திக்கத் தெரிந்தது.
கடந்த இந்த ஆண்டில்
காரியம் சிலர்
முடித்திருப்பார்
அதனால், கலங்காமல்
வரவேற்பார்.
கடந்த இந்த ஆண்டில்
கடந்த நாட்களை
நினைத்தே, நாட்டிலே
நமக்கு என்ன லாபம்
நாட்டிற்கு நம்மால்
என்ன பயன்
நமக்கு நாட்டால்
என்ன நன்மை
என்று சிந்தித்தே
சிந்தும் பல கண்ணிர்த்
துளிகள்.
இந்தப் புத்தாண்டின்
வரவிற்கு அவனின்
அந்த பன்னீர்த்துளிகளே
அர்ச்சனைத் துளிகளாகும்.
Comments
Post a Comment