விஜயா
அருகாய் வளர்ந்து
கரும்பாய் இருந்திடு
கடலாய் இருந்து
அலையாய் மாறிவிடு
தென்றலாய் இருந்து
தென்தமிழாய் இசைத்திடு
வினையாய் இருந்திடு
தினையாய் மலர்ந்திடு
ஜன்னலாய் இருந்து
காற்றுக்கு வழிகொடு
யாவும் தெரிந்து
பாகாய் கலந்திடு
நிலவை மறைத்திடு
விண்ணில் பறந்திடு
சொல்லை வடித்தெடு
உன்னில் சிறந்திடு
அன்பில் கிளைத்திடு
ஆதரவில் நின்றிடு
அரசை நினைத்திடு
அச்சாணி போன்றிரு
காற்றாய் இருந்திடு
ஆறாய் ஓடிடு
தேனாய் இனித்திரு
தமிழுக்கு உயிர்க்கொடு
உயிருக்கு தமிழைக்கொடு
உயர்வுக்கு உயிரைத்தரும்
உயிரை நான்போற்றுவேன்
உள்ளம் வரை வாழ் என்றே.
Comments
Post a Comment